மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வெடுத்தது ஐபிஎல் 2026க்கு உதவும்: பட்லர்

இங்கிலாந்து வீரர் ஜோஷ் பட்லர் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெற்றது குறித்து...

News image

டி20 உலகக் கோப்பையில் ஆட்டமிழந்து வெளியேறிய ஜோஷ் பட்லர். - படம்: ஏபி

Updated On :19 மார்ச் 2026, 9:17 am

இங்கிலாந்து வீரர் ஜோஷ் பட்லர் (35 வயது) கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவது ஐபிஎல் 2026 சீசனுக்கு உதவும் எனக் கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் பட்லர் மிகவும் மோசமாக விளையாடினார். அவரது அணி அரையிறுதியில் இந்தியாவிடம் தோற்று வெளியேறியது.

ஐபிஎல் 2026 சீசனுக்கான போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. ஜோஷ் பட்லர் குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடி வருகிறார். குஜராத் அணி முதல் போட்டியில் மார்ச் 31ஆம் தேதி பஞ்சாபுடன் மோதுகிறது.

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் 8 போட்டிகளில் 87 ரன்கள் மட்டுமே எடுத்தார். சராசரி 10.87ஆக இருக்க, ஸ்டிரைக் ரேட் 116ஆக இருந்ததும் கவனிக்கத்தக்கது.

ஐபிஎல் கோப்பையை 2022ல் வென்ற குஜராத் அணியில் முக்கியமான வீரராக இருக்கும் பட்லர் ஃபார் தி லவ் ஆஃப் கிரிக்கெட் எனும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கூறியிருப்பதாவது:

நான் கிரிக்கெட்டை விட்டு தள்ளி இருக்க நேரமே கிடைக்கவில்லை. தற்போது, அதற்கான சரியான நேரம் வந்திருக்கிறது. இதுதான் நான் எதிர்பார்த்த நேரமாக இருக்கிறது.

நிச்சயமாக, டி20 உலகக் கோப்பையில் நான் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. எனக்கு கிரிக்கெட் பற்றி யோசிக்காமல் அதைவிட்டு தள்ளி இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

இந்த வாரம் முழுமையாக ஓய்வெடுத்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். புத்துணர்வாக இருந்தது. நான் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாதது ஏன் என்பதை புரிந்துகொண்டேன். ஆனால், உண்மையில் என்ன பிரச்னை என்பது தெரியவில்லை.

உங்களது கடின உழைப்பு, நோக்கம் எல்லாமே நன்றாக விளையாட வேண்டும் என்பதற்காகத்தான். சில நேரங்களில் அது அப்படி ஆவதில்லை. அதைதான் நான் புரிந்துகொள்கிறேன். முயற்சியில் குறைகள் இல்லை; சில சமயங்கள் அப்படி நடப்பதில்லை என்றார்.

Summary

Jos Buttler hopes short break from cricket will help him in IPL 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.