மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அதிரடி அரைசதம்: ஃபார்முக்கு திரும்பிய ஜாஸ் பட்லர்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர் ஜாஸ் பட்லர் குறித்து...

News image

ஜாஸ் பட்லர். - படம்: எக்ஸ் / குஜராத் டைட்டன்ஸ்.

Updated On :8 ஏப்ரல் 2026, 3:04 pm

குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர் ஜாஸ் பட்லர் ஃபார்முக்கு திரும்பி அதன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜாஸ் பட்லர் 24 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். குஜராத் அணி 12 ஓவர்களில் 133/2 ரன்கள் குவித்துள்ளது.

தில்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் வெற்றியைப் பெறாத நிலையில், இந்தப் போட்டியில் நன்றாக பேட்டிங் செய்து வருகிறது.

இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் டி20 உலகக் கோப்பை முழுவதும் மிகவும் மோசமாக விளையாடி வந்தார். இந்த நிலையில், குஜராத் அணிக்கு கடந்த போட்டியிலேயே சிறிது ஃபார்முக்கு திரும்பியிந்தார்.

தற்போது, தில்லி போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி அணிக்கு அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குல்தீப் ஓவரில் 52 ரன்களில் இருக்கும்போது போல்ட் ஆகி ஆட்டமிழந்தார்.

Summary

Explosive Half-Century: Jos Buttler Returns to Form!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.