இந்திய கேப்டனாக மகேந்திர சிங் தோனி விளையாடிய போது ஒருநாளும் யுவராஜ் சிங்கை அணியில் இருந்து நீக்கக் கூறியது கிடையாது என்று அப்போதைய தேர்வுக் குழுத் தலைவர் சந்தீப் பட்டீல் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் பொறுப்பேற்ற பிறகு, மூத்த வீரர்களான சேவாக், யுவராஜ் சிங் போன்றவர்களை அணியில் இருந்து நீக்குமாறு தேர்வுக் குழுவிடம் பரிந்துரைத்தாக பல ஆண்டுகளாக பரவி வருகின்றன.
யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங், கடந்த காலங்களில் பலமுறை தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை தோனிதான் அழித்தார் என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவரின் குற்றச்சாட்டுகள் பல முறை வைரலாகப் பகிரப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவர் சந்தீப் பட்டீல், யுவராஜ் சிங் - தோனி விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
”யுவராஜ் சிங்கை தேர்வு செய்ய வேண்டாம் என்று தேர்வுக் குழுக் கூட்டத்திலோ, போட்டியின் போதோ, வெளிநாட்டுப் பயணங்களின் போதோ எந்த சூழ்நிலையிலும் ஒருமுறைகூட தோனி கூறியது கிடையாது.
தேர்வுக் குழுவின் மீது தோனிக்கு எப்போதும் முழு நம்பிக்கை இருந்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், யுவராஜ் சிங் தந்தையின் கருத்துகள் குறித்து பதிலளித்த அவர், ”மகன் மீது தந்தை கவலைப்படுவது தவறல்ல. ஆனால், தவறானவர் மீது பழிப் போடப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே பேட்டியில் கெளதம் கம்பீர் குறித்து பேசிய சந்தீப் பட்டீல் தெரிவித்ததாவது:
“நான் தேர்வுக் குழுத் தலைவராக இருந்த காலக்கட்டத்தில்தான் கம்பீருக்கு பதிலாக தவான் இந்திய அணியில் இடம்பிடித்தார். அதுநாள் வரை என்னுடன் நெருங்கி பழகி வந்த கம்பீர், பேசுவதையே நிறுத்திவிட்டார்.
பொது நிகழ்வுகளில் ஒன்றாக பங்கேற்ற போதும் எனது முகத்தைகூட அவர் பார்க்கவில்லை. கம்பீர் எதையும் எளிதில் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார். இருப்பினும், கம்பீர் மீது எனக்கு மரியாதை உள்ளது” என்றார்.
தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Dhoni never asked to remove Yuvraj! Former chairman of selection committee
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கபில் தேவ், தோனியிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்! யுவராஜ் சிங்

என்னுடைய இடத்தில் இருந்தால் தெரியும்..! தோனியை வம்பிழுத்த கௌதம் கம்பீர்!

இந்திய அணியில் கம்பீர் நீக்கப்பட்ட பின்.. மௌனம் கலைத்த தேர்வுக்குழு முன்னாள் தலைவர்!

டி20 உலகக் கோப்பை! கம்பீர், பும்ராவை பாராட்டிய தோனி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



