டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா - நியூசிலாந்து இடையேயான இறுதிப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான இறுதிப்போட்டி இன்று (மார்ச் 8) அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி திடலில் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்திய அணி கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியை அகமதாபாதில் விளையாடியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது அனைவருக்கும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்திருக்கும். மீண்டும் அதே அகமதாபாத் திடலில் இந்திய அணி இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் அகமதாபாதில் நடைபெற்ற போட்டியிலும் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து, மீண்டும் அகமதாபாதில் இந்திய அணி விளையாடவுள்ளதால் இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் போட்டியை நடத்தும் நாடு இதுவரை கோப்பையை வென்றதில்லை என்ற வரலாறும், தொடர்ச்சியாக ஒரு அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றதில்லை என்ற வரலாறும் தொடர்கிறது. இந்த வரலாற்றை இந்திய அணி மாற்றியமைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் பட்சத்தில், டி20 உலகக் கோப்பையை 3 முறை வென்ற முதல் அணி என்ற சாதனையையும் இந்திய அணி படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Regarding the final match of the T20 World Cup between India and New Zealand to be held in Ahmedabad...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

ரன்கள் குவிப்பதில் தடுமாற்றம்; இறுதிப்போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா?

இங்கிலாந்தின் சுழலை எதிர்கொள்ள இந்திய அணி தயாரா? இறுதிப்போட்டியில் யார்?

வலுவான நிலையில் நியூசிலாந்து; அரையிறுதிக்கு முன்னேற பாகிஸ்தான் செய்ய வேண்டியதென்ன?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



