இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரண் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் வான்கடேவில் இந்திய ரசிகர்களை அமைதியாக்குவோம் என நம்பிக்கை அளித்துள்ளார்.
இந்தியாவும் இங்கிலாந்து அணியும் இன்றிரவு 7 மணிக்கு மும்பை வான்கடே திடலில் மோதுகின்றது.
இந்தப் போட்டிக்கு முன்பாக, சாம் கரண் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
உலகத்தில் நடைபெற்றுவரும் போர்களால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் இப்போதைக்கு வியாழக்கிழமை இரவைப் பற்றி மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம்.
ஐபிஎல் போட்டிகளால் எங்களுக்கு நல்லது நடத்திருக்கிறது. சிறுவனாக இருந்து இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது ஒரு கனவாக இருக்கிறது.
தேசிய கீதம் மூலம் போட்டியைத் தொடங்குவது நல்ல அனுபவம். அதிலும் வான்கடேவில் ரசிகர்கள் சப்தம் கூடுதலாக இருப்பதால் போட்டியைப் பார்க்க நல்ல அனுபவமாக இருக்கும்.
ரசிகர்கள் அமைதியாக இருந்தால், இங்கிலாந்து அணி நன்றாக விளையாடுவது என்று அர்த்தம். அதைதான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
நாங்கள் இந்தியாவில் அதிகமான கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். அதைப் பயன்படுத்தி விளையாட வேண்டும். எந்த ஒரு இளம் வீரருக்கும் இந்தியாவுக்கு எதிராக அரையிறுதுயில் விளையாடுவது மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.
இரண்டு சிறந்த அணிகள் விளையாடுவதால் திடலில் ரசிகர்கள் அதிகம் கூச்சலிட வாய்ப்பிருக்கிறது. அருமையான திடல். கடந்த நான்கைந்து வாரங்களாக விளையாடியதன் பலனாக அரையிறுதியில் வந்திருக்கிறோம். கூடுதலாக, அடுத்த சுற்றான இறுதிப் போட்டிக்கும் செல்லுவோம் என நம்புகிறேன்.
இந்தியா, இலங்கையில் விளையாடியதால் எங்களுக்கு சற்று சவாலானதாக அமைந்தது. நாங்கள் மிகச் சிறப்பாக தகவமைத்துக்கொண்டு விளையாடினோம். நல்ல 4 அணிகளே அரையிறுதிக்கு வந்துள்ளன. பார்போம் யார் கோப்பை வெல்கிறார்கள் எனக் கூறினார்.
Summary
Sam Curran hopes to silence the Wankhede crowd in T20 world cup 2026.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகக் கோப்பைக்கு ரசிகரும் வரவேண்டுமென அடம்பிடிக்கும் கால்பந்து வீரர்கள்!

ராஜஸ்தானுக்குப் பின்னடைவு.. சிஎஸ்கேவிலிருந்து சென்ற ஆல்ரவுண்டர் சாம் கரன் விலகல்!

வான்கடேவை அமைதியாக்க முடியாத சாம் கரண்..! அடித்து நொறுக்கிய இந்திய வீரர்கள்!

இங்கிலாந்தின் சுழலை எதிர்கொள்ள இந்திய அணி தயாரா? இறுதிப்போட்டியில் யார்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



