தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் தனது 12ஆவது முறையாக ஐசிசி உலகக் கோப்பையில் கோப்பையை வெல்லாமல் தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
சமீபத்தில் தென்னாப்பிரிக்க அணி ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது. ஆனால், அந்த அணியில் டேவிட் மில்லர் இல்லாததும் குறிப்பிடத்தக்கது.
டேவிட் மில்லர் (36 வயது) கடந்த 2010-ல் தென்னாப்பிரிக்க ஒருநாள், டி20 அணியில் அறிமுகமாகினார். தற்போது வரை, அந்த அணியின் நட்சத்திர வீரராக இருக்கிறார்.
சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி அசத்தினார். கடந்த டி20 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியிலும் சிறப்பாக விளையாடிய அவர் ஹார்திக் வீசிய பந்தில் சூர்யகுமார் எல்லைக் கோட்டில் மிகவும் நம்பமுடியாத ஒரு ஃபீல்டிங்கினால் ஆட்டமிழப்பார்.
ஒவ்வொரு முறையும் டேவிட் மில்லர் தோல்வியினால் வெளியேறும்போது தென்னாப்பிரிக்க அணி மட்டுமல்லாமல், கிரிக்கெட் ரசிகர்களுமே வருத்தத்தில் மூழ்குகிறார்கள். அதே அளவுக்கு, மில்லருக்கு அந்தளவுக்கு அதிர்ஷ்டமில்லை எனவும் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள்.
டேவிட் மில்லர் இழந்த ஐசிசி கோப்பைகள் விவரங்கள்
2013 - சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் தோல்வி
2014 - டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்வி
2015 - ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்வி
2016 - டி20 உலகக் கோப்பை குரூப் சுற்றில் தோல்வி
2017 - சாம்பியன்ஸ் டிராபி குரூப் சுற்றில் தோல்வி
2019 - ஒருநாள் உலகக் கோப்பை குரூப் சுற்றில் தோல்வி
2021 - டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் தோல்வி
2022 - டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் தோல்வி
2023 - ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்வி
2024 - டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி
2025 - சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் தோல்வி
2026 - டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்வி
Summary
David miller lost 12 icc tournaments... Most unluckiest Cricket Player in recent History
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மேற்காசிய போர்! மே.இ.தீவுகள், தென்னாப்பிரிக்க வீரர்கள் தாயகம் திரும்பினர்!

கன்னத்தில் அறைந்தது போல... தோல்விக்குப் பிறகு மார்க்ரம் பேட்டி!

மூச்சுத்திணறல் அல்ல, கொடூரமான தாக்குதல்..! தோல்வி குறித்து தென்னாப்பிரிக்க பயிற்சியாளர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



