இந்திய அணி அரையிறுதிக்கு எப்படி முன்னேறியது என்பது முக்கியமில்லை எனவும், அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெறுவதான் முக்கியம் எனவும் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் பேசியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் இன்று (மார்ச் 4) நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் நிலையில், நாளை (மார்ச் 5) வான்கடே திடலில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், இந்திய அணி அரையிறுதிக்கு எவ்வாறு முன்னேறியது என்பது முக்கியமில்லை எனவும், அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெறுவதுதான் முக்கியம் எனவும் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிராக விளையாடிய அணிகள் அனைத்தும் சிறந்த அணிகள். அவர்கள் நன்றாக விளையாடினார்கள். எதிரணியை நாங்கள் 120 அல்லது 150 ரன்களில் கட்டுபடுத்த வேண்டும் என நினைத்தால், எல்லா போட்டிகளிலும் அது கடினம். இந்திய அணி எப்படி அரையிறுதிக்கு முன்னேறியது என்பது முக்கியமில்லை. அடுத்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி எப்படி விளையாடப் போகிறது என்பதுதான் முக்கியம்.
சரியான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தவில்லை என்பது குறித்து அதிகம் பேசவில்லை. இந்திய அணியில் ஒவ்வொரு போட்டியிலும் யாராவது ஒருவர் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடித் தருகின்றனர். கடந்த இரண்டு போட்டிகளாக நாங்கள் நன்றாக விளையாடினோம். நாளை நடைபெறும் போட்டியில் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என நம்புகிறேன்.
ஒவ்வொரு ஆட்டமும் எப்படி சவால் நிறைந்ததாக இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதனால் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடுவோம் என உறுதியாக யாராலும் ஒருபோதும் கூற முடியாது. ஆனால், அரையிறுதியில் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கிறோம். இந்திய வீரர்கள் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
Summary
Morne Morkel has said that it doesn't matter how the Indian team advanced to the semi-finals, what matters is that they win the next two matches.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போர் நெருக்கடி; 3 நாள் பேருந்து பயணம்..! 40 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கோப்பையில் தேர்வான இராக்!

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏமாற்றும் கேப்டன்கள்! தொடரும் வரலாறு..!

டி20 உலகக் கோப்பை! கம்பீர், பும்ராவை பாராட்டிய தோனி!

சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் அதிரடி; நியூசி.க்கு இமாலய இலக்கு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



