டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணிக்கு இளம் தலைமைப் பயிற்சியாளர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் அணி இந்த ஆண்டு அடுத்தடுத்து தொடர்ச்சியாக டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் அணி, வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
அதன் பின், பாகிஸ்தான் அணி மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. கடைசியாக பாகிஸ்தான் அணி கடந்த ஆண்டு அதன் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்த நிலையில், அடுத்தடுத்து டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது.
இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமதை நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இடைக்காலப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும், மசூத் அசாரின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததால், அவரது சம்மதத்துடன் சர்ஃபராஸ் அகமது புதிய தலைமையப் பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இது தொடர்பாக இதுவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
38 வயதாகும் சர்ஃபராஸ் அகமது பாகிஸ்தான் அணிக்காக54 டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 61 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
It has been reported that a young head coach will be appointed for the Pakistan team for Test matches.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் போர்: 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் பாகிஸ்தான்!

வருண் சக்ரவர்த்தி மீண்டு வருவாரா? கேகேஆர் தலைமைப் பயிற்சியாளர் பதில்!

இம்பாக்ட் வீரர் விதிக்கு ஆர்சிபி தலைமைப் பயிற்சியாளர் ஆதரவு!

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் அணி! வலுக்கும் எதிர்ப்பு... எக்ஸ் பக்கம் முடக்கம்!!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



