இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக ராஞ்சி காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியின் சிமாலியா பகுதியில் தோனியின் வீடு அமைந்துள்ளது. ராஞ்சியில் இருக்கும் நாள்களில் தோனி வெளியே செல்லும்போது அவரே கார் மற்றும் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்வது வழக்கம்.
பலமுறை கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை தோனி ஓட்டிச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகப் பரவும்.
இந்த நிலையில், சமீபத்தில் தனது வீட்டின் அருகே அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட கூடுதல் வேகத்தில் தோனி காரை இயக்கிச் சென்றது காவல்துறையின் தானியங்கி கேமிராவில் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 183 இன் கீழ், தோனிக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக ராஞ்சி போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சில நாள்களுக்கு முன்னதாக, குடியிருப்பு நோக்கத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை வணிக ரீதியிலாக பயன்படுத்தியதாக ஜார்க்கண்ட் மாநில வீட்டுவசதி வாரியம் தோனிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
பயிற்சியில் தோனி
ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், சென்னைக்கு வருகைதந்துள்ள தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்தாண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.
இந்த சீசனில் பல்வேறு மாற்றங்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Summary
Indian Cricket team former skipper Dhoni fined Rs. 1,000 by the Ranchi police!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கீப்பிங் பயிற்சியில் எம்.எஸ். தோனி..! மும்பைக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?

சிஎஸ்கே பிளேயிங் லெவனில் தோனிக்கு இடமிருக்கிறதா?

என்னுடைய இடத்தில் இருந்தால் தெரியும்..! தோனியை வம்பிழுத்த கௌதம் கம்பீர்!
மஞ்சள் ஜெர்சியில் இது தோனிக்கு கடைசி சீசனாக இருக்கலாம்: இர்பான் பதான்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை



