மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மஞ்சள் ஜெர்சியில் இது தோனிக்கு கடைசி சீசனாக இருக்கலாம்: இர்பான் பதான்

நடப்பு ஐபிஎல் சீசன் மகேந்திர சிங் தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

News image

மகேந்திர சிங் தோனி - படம் | சென்னை சூப்பர் கிங்ஸ் (எக்ஸ்)

Updated On :13 மார்ச் 2026, 12:31 pm

நடப்பு ஐபிஎல் சீசன் மகேந்திர சிங் தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்கொள்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் சீசன் மகேந்திர சிங் தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: மகேந்திர சிங் தோனி இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முழுமையற்றதாக இருக்கும். தோனியை மஞ்சள் நிற ஜெர்சியில் பார்ப்பது இதுவே கடைசி சீசனாக இருக்கலாம். தோனி இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ஐபிஎல் தொடரை நினைத்துப் பார்க்கவே கடினமாக இருக்கிறது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒருங்கிணைப்பதில் தோனி மிக முக்கிய பங்கு வகிப்பார். அவர் எத்தனை போட்டிகளில் விளையாடுவார் என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், அவர் அணியில் இருப்பது அணிக்கு மிகப் பெரிய பலமாக இருக்கும் என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி அணிக்கு 5 ஐபிஎல் பட்டங்களை வென்று கொடுத்துள்ளார். 44 வயதாகும் அவர், இதுவரை நடைபெற்ற 18 ஐபிஎல் சீசன்களிலும் விளையாடியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Former Indian team player Irfan Pathan has said that the current IPL season could be Mahendra Singh Dhoni's last IPL season.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.