இந்தியா - இங்கிலாந்து மோதும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் யாருக்கு சாதகமாக அமையும் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து மோதும் முதலாவது அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவிலும், இந்தியா - இங்கிலாந்து மோதும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி மும்பையில் நடைபெறவிருக்கிறது.
முதல் அரையிறுதி நாளை (மார்ச் 4) கொல்கத்தா ஈடன் கார்டன் திடலிலும், இரண்டாவது அரையிறுதி நாளை மறுநாள் (மார்ச் 5) மும்பை வான்கடே திடலிலும் நடைபெறவுள்ளது.
கோப்பையை வெல்லாத அணிகளான தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் முதல் அரையிறுதியிலும், மூன்றாவது கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இரண்டாவது அரையிறுதியிலும் மோதுகின்றன.
இந்த நிலையில், அரையிறுதிப் போட்டிகள் மழையால் பாதிக்கப்படும் சூழலில் எந்த முறையில் முடிவுகள் வெளியாகும் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அரையிறுதிப் போட்டிகள் மழையால் பாதிக்கப்படும் பட்சத்தில் அதற்கு அடுத்த நாள் மாற்று நாளாக (ரிசர்வ் டே) இருக்கும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
அன்றைய நாளில் மழை பெய்தால் கூடுதலாக 90 நிமிடங்களும், வியாழக்கிழமை கூடுதலாக 120 நிமிடங்களும் வழங்கப்படும். இந்த அனைத்து நாள்களும் மழையால் ரத்தானால் வெள்ளிக்கிழமை 5 ஓவர்கள் கொண்ட போட்டி நடத்தப்படும்.
வெள்ளிக்கிழமையும் முற்றிலும் மழையால் பாதிக்கப்படும் பட்சத்தில், சூப்பர்-8 புள்ளிப்பட்டியலின்படி, மூன்று வெற்றிகளுடன் முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும்.
இரண்டு அரையிறுதிப் போட்டிகளிலும் இதே சூழல் நீடித்தால், இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டியில் மோதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 மற்றும் 2024 ஆம் ஆண்டில் ஐசிசி டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. அந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளே (2022 - இங்கிலாந்து, 2024 - இந்தியா) சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தன. அதனால், இந்தப் போட்டியிலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Summary
In that scenario, England will move to the final as they finished higher in their Super 8 group compared to India. England topped their group with 3 wins while India finished second with 2 wins
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தானை பதம்பார்த்த இங்கிலாந்து.. 2-வது முறை சாம்பியன்! 2022 ரீவைண்ட்!!

சம பலத்துடன் இருக்கும் இந்தியா - இங்கிலாந்து? ஒரே மாதிரியான புள்ளி விவரங்கள்!

இங்கிலாந்தின் சுழலை எதிர்கொள்ள இந்திய அணி தயாரா? இறுதிப்போட்டியில் யார்?

அரையிறுதிப் போட்டியில் ஃபார்முக்குத் திரும்புவாரா ஜோஸ் பட்லர்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


