மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பவர்பிளேவில் பும்ராவுக்கு குறைந்தது இரண்டு ஓவர்கள் கொடுங்கள்; முன்னாள் கேப்டன் வலியுறுத்தல்!

பவர்பிளேவில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு குறைந்தது இரண்டு ஓவர்களாவது கொடுக்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

News image

ஜஸ்பிரித் பும்ரா - படம் | பிசிசிஐ

Updated On :3 மார்ச் 2026, 12:08 pm

பவர்பிளேவில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு குறைந்தது இரண்டு ஓவர்களாவது கொடுக்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கான போட்டிகள் நிறைவடைந்த நிலையில், நாளை (மார்ச் 4) முதல் அரையிறுதிப் போட்டிகள் தொடங்குகின்றன.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே திடலில் நாளை மறுநாள் (மார்ச் 5) நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில், பவர்பிளேவில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு குறைந்தது இரண்டு ஓவர்களாவது கொடுக்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பவர்பிளேவில் ஜஸ்பிரித் பும்ரா குறைந்தது இரண்டு ஓவர்கள் வீச வேண்டும் என்பதை நான் நம்புகிறேன். ஏனெனில், புதிய பந்தில் நன்றாக பந்துவீசி ஜஸ்பிரித் பும்ரா விக்கெட்டுகளை எடுத்தால் இந்திய அணிக்கு அது மிகவும் சிறப்பான விஷயமாக இருக்கும். டாப் ஆர்டரில் விளையாடும் ஜோஸ் பட்லர், பில் சால்ட் மற்றும் ஹாரி ப்ரூக்குக்கு பும்ரா அச்சுறுத்தலாக இருப்பார்.

ஜஸ்பிரித் பும்ரா ஐந்தாவது ஓவரில் பந்துவீச அழைக்கப்படுகிறார். ஏற்கனவே நான்கு ஓவர்களில் தொடக்க ஆட்டக்காரர்கள் குறைந்தது 8-10 பந்துகள் எதிர்கொண்டு எந்த ஒரு சிரமமுமின்றி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதனால், ஆட்டத்தின் முதல் ஓவரை பும்ராவுக்கு கொடுத்து தொடக்க ஆட்டக்காரர்கள் விக்கெட்டுகளை வீழ்த்துவதுதானே சரியானதாக இருக்கும் என்றார்.

Summary

Former India captain Sunil Gavaskar has insisted that Jasprit Bumrah should be given at least two overs in the Powerplay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.