அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுக்கவில்லை என பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகா தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றில் பல்லேகலேவில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இருப்பினும், நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்த நிலையில், அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுக்கவில்லை என பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடர் முழுவதுமே பாகிஸ்தான் அணி மிகவும் சராசரியாக செயல்பட்டுள்ளது. 20 ஓவர்கள் ஆட்டத்தில் நாங்கள் 18 ஓவர்கள் நன்றாக விளையாடினோம். ஆனால், கடைசி மூன்று ஓவர்களில் எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்தவில்லை. கடந்த காலங்களைக் காட்டிலும் பந்துவீச்சில் நன்றாக செயல்பட்டுள்ளோம். பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி நன்றாக உள்ளது. ஆனால், எங்களது திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த தவறுகிறோம்.
பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு நாங்கள் முழுமையாக பொறுப்பேற்றுக் கொள்கிறோம். ஏனெனில், உலகக் கோப்பைக்கான அணியைத் தேர்வு செய்ததில் நாங்கள் சம்பந்தப்பட்டுள்ளோம். அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு நாங்களே பொறுப்பு. பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். பயிற்சியாளரும் இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வார் என என்னால் உறுதியாகக் கூற முடியும்.
அழுத்தமான சூழல்களில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். ஏனெனில், அழுத்தமான சூழலில் இருக்கும்போதுதான் தவறான முடிவுகளை எடுக்கிறோம். உலகின் சிறந்த அணிகளுக்கு எதிராக விளையாடுவதால், ஐசிசி நடத்தும் போட்டிகளில் அதிகப்படியான அழுத்தத்தில் விளையாடுகிறோம். இந்த தொடரின் ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியமான போட்டி. ஏனெனில், ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும் தொடரை விட்டு வெளியேற்றப்படும் சூழல் இருந்தது. அதனால், அழுத்தமான சூழலில் இருக்கும்போது, சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என நினைக்கிறேன். அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுக்க நாங்கள் தவறிவிட்டோம் என்றார்.
Summary
Pakistan captain Salman Ali Agha said that he did not make the right decisions under pressure.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகக் கோப்பைக்கு ரசிகரும் வரவேண்டுமென அடம்பிடிக்கும் கால்பந்து வீரர்கள்!

உலகக் கோப்பை: காங்கோ கால்பந்து அணியின் தீவிர ரசிகருக்கு விசா மறுப்பு!

சஞ்சு சாம்சன் நீக்கம்.. வாழ்த்துப் பதிவை ‘எடிட்’ செய்து வெளியிட்டாரா ஷுப்மன் கில்?

கன்னத்தில் அறைந்தது போல... தோல்விக்குப் பிறகு மார்க்ரம் பேட்டி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



