இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பயிற்சியாளர் டேரன் சமி பேசியது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
”எங்களது ராணுவ வீரர்கள் தயாராக இருக்கிறார்கள்” என பயிற்சியாளர் டேரன் சமி பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கொல்கத்தாவில் ஈடன் கார்டன் திடலில் இன்று இரவு 7 மணிக்கு இந்திய அணியும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் பலப்பரீட்சை செய்கின்றன.
மெய்நிகர் காலிறுதியாகக் கருதப்படும் இந்தப் போட்டியில் வெல்பவர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள். தோற்பவர்கள் வெளியேறுவார்கள் என்பதும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குரூப்1 பிரிவில் ஏற்கெனவே தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பயிற்சியாளர் டேரன் சமி பேசியிருப்பதாவது:
கொல்கத்தாவில் இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தியாவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றியைப் பெற்றுள்ளது. அதற்குப் பிறகான ஒரு அடையாளத்தை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் சென்றுள்ளார்கள்.
ஏற்கெனவே, இங்கிருந்த எனது அனுபவத்தை பயன்படுத்தி இருக்கிறேன். இந்தத் திடல் எங்களுக்கு நன்றாக அமைந்திருக்கிறது.
எங்களது அனைத்து ராணுவ வீரர்களும் தயாராக இருக்கிறார்கள். எங்களிடம் 11 பயங்கரமான வீரர்கள் இருக்கிறார்கள். அதேமாதிரி இந்தியாவிடமும் 11 வீரர்கள் இருக்கிறார்கள். அதனால், இந்தப் போட்டி இரண்டு சிறந்த அணிகளுக்கான போட்டியாக இருக்கும்.
நான் ஏற்கெனவே, சொன்னதுபோல உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவை ஒருமுறையாவது வெல்ல வேண்டும். அந்தநாள்தான் இப்போது எங்களுக்கு அமைந்திருக்கிறது.
வருண் சக்கரவர்த்தி உலகின் நம்.1 வீரராக இருக்கிறார். நாங்கள் எதிரணியினரை மதிக்கிறோம் என்றார்.
Summary
'All My Soldiers Are Ready', Says Darren Sammy Ahead Of Must-Win Clash Against India.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆஷிஷ் நெஹ்ரா கால்பந்து பயிற்சியாளர் போன்றவர்: ஹர்பஜன் சிங்
மகளிா் ஒருநாள் கிரிக்கெட்: தொடரை வென்றது ஆஸ்திரேலியா

சிஎஸ்கே பிளேயிங் லெவனில் அகீல் ஹொசைனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

இந்தியாவுக்கு 196 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்; அரையிறுதியில் யார்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



