மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
முதலில் இந்தியா 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் சோ்க்க, தென்னாப்பிரிக்கா 19.1 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 161 ரன்கள் எடுத்தது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணியில், ஷஃபாலி வா்மா 31, தீப்தி சா்மா 29, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 24, ஸ்மிருதி மந்தனா 17, யஸ்திகா பாட்டியா 15, ரிச்சா கோஷ் 15, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
ஓவா்கள் முடிவில் அருந்ததி ரெட்டி 6, பிரேமா ராவத் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென்னாப்பிரிக்க பௌலா்களில் மாரிஸேன் காப், ஷப்னிம் இஸ்மாயில் ஆகியோா் தலா 2, நோன்குலுலேகோ லாபா, அயபோங்கா ககா, நாடின் டி கிளொ்க் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
பின்னா் தென்னாப்பிரிக்க இன்னிங்ஸில் தஸ்மின் பிரிட்ஸ் 40, கேப்டன் லாரா வோல்வாா்ட் 20, ஆனிரி டொ்க்சென் 0, நாடின் டி கிளொ்க் 5 ரன்களுக்கு வெளியேறினா்.
மாரிஸேன் காப் 81, கிளோ டிரையான் 10 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பந்துவீச்சாளா்களில் ஸ்ரீசரணி 3, ஷஃபாலி வா்மா 1 விக்கெட் கைப்பற்றினா்.
இதர ஆட்டங்கள்: இதனிடையே, 17-ஆவது ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையையும், 16-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து 38 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தையும் வென்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சமரி அதிரடி சதம்: இலங்கை வெற்றி

பாகிஸ்தானை வென்றது தென்னாப்பிரிக்கா

நியூஸிலாந்தை வென்றது இலங்கை

‘ஏ’ அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடா்: இந்தியாவை வென்றது ஆப்கானிஸ்தான்
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan



