நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியும் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் மஜும்தார் தெரிவித்துள்ளார்.
ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.இதற்கு முன்னதாக, கடந்த 2005 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியபோதிலும் கோப்பையை வெல்ல முடியவில்லை. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் பல ஆண்டுகளாக தொடர்ந்த கோப்பைக்கான கனவு நிறைவேறியது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணிக்கு உத்வேகம் அளித்துள்ளது எனவும், இந்திய அணியால் டி20 உலகக் கோப்பைத் தொடரிலும் சாம்பியன் பட்டம் வெல்ல முடியும் எனவும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் மஜும்தார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முற்றிலும் வித்தியாசமானது. நாங்கள் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றோம். ஆனால், டி20 வடிவிலான போட்டிகள் முற்றிலும் புதிதானவை. அதனால், டி20 உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக செயல்படுவதை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறோம். கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம வென்றதிலிருந்து என்னால் ஒரு விஷயத்தை உறுதியளிக்க முடியும். எங்களால் டி20 உலகக் கோப்பைத் தொடரிலும் சாம்பியன் பட்டம் வெல்ல முடியும் என்றார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் நாளை (ஜூன் 14) நடைபெறும் தனது முதல் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
The Indian team's head coach, Amol Muzumdar, has stated that the team is capable of winning the championship title in the ongoing T20 World Cup tournament.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகளிர் உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸி.!

சச்சின் டெண்டுல்கரிடமிந்து வந்த அழைப்பு... உலகக் கோப்பை நினைவைப் பகிர்ந்த ஜெமிமா!








