வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்த ஹாரி ப்ரூக்!

ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் முதலிடம் பிடித்துள்ளார்.

News image

ஹாரி ப்ரூக் - படம் | AP

Updated On :10 ஜூன் 2026, 7:23 pm IST

ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் முதலிடம் பிடித்துள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையை ஐசிசி இன்று (ஜூன் 10) வெளியிட்டது. அதில், டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்து அணியின் துணைக் கேப்டனான ஹாரி ப்ரூக் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். முன்னதாக, முதலிடத்தில் இங்கிலாந்து அணியின் சக வீரரான ஜோ ரூட் இருந்த நிலையில், அவரை ஹாரி ப்ரூக் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் நியூசிலாந்துக்கு எதிரானப் போட்டியில் அரைசதம் எடுத்ததன் மூலம், ஹாரி ப்ரூக் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் மற்றும் மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆகியோர் உள்ளனர்.

இந்திய அணியைப் பொருத்தவரையில், கேப்டன் ஷுப்மல் கில் இரண்டு இடங்கள் முன்னேறி 8-வது இடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் சதம் விளாசியதன் மூலம் அவர் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

Summary

England player Harry Brook has secured the top spot in the ICC Test batter rankings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.