ஐபிஎல் 2026 தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி சிறந்த பந்துவீச்சாளருக்கான பர்பிள் கேப் பட்டத்தை குஜராத் டைட்டன்ஸ் அணியின் ககிசோ ரபாடா வென்றுள்ளார்.
குஜராத் மாநிலம், அகமதாபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் 2026 இறுதி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று ஆர்சிபி அணி சாதனை படைத்துள்ளது.
இந்தப் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்த விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இந்த நிலையில், ஐபிஎல் 2026 தொடர் முழுவதும் அதிக ரன்கள் குவித்து ஆர்ஞ்சு கேப்பை வைபவ் சூர்யவன்ஷி (776 ரன்கள்) வென்ற நிலையில், அதிக விக்கெட்டுகளை (29) கைப்பற்றிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் ககிசோ ரபாடா பர்பிள் கேப்பை வென்றுள்ளார்.
அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்
1. ககிசோ ரபாடா (குஜராத் டைட்டன்ஸ்) - 29 விக்கெட்டுகள்
2. புவனேஷ்வர் குமார் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) - 28 விக்கெட்டுகள்
3. ஜோஃப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான் ராயல்ஸ்) - 25 விக்கெட்டுகள்
4. ரஷீத் கான் (குஜராத் டைட்டன்ஸ்) - 21 விக்கெட்டுகள்
5. அன்ஷுல் கம்போஜ் (சென்னை சூப்பர் கிங்ஸ்) - 21 விக்கெட்டுகள்
மேலும், இந்த சீசனில் 172 டாட் பந்துகளை வீசி, குஜராத் அணியின் முகமது சீராஜும் ரபாடாவும் முறையே முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர்.
இந்த சீசனில் எந்த பந்துவீச்சாளரும் ஹாட்ரிக் விக்கெட்டை எடுக்காதது குறிப்பிடத்தக்கது.
Summary
IPL 2026: Rabada Wins the Purple Cap! Who Were the Best Bowlers?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொறுமையும் எளிமையும்... ஆட்ட நாயகன் விருது வென்ற ககிசோ ரபாடாவின் பேட்டி!

ஐபிஎல் 2026: பவர்பிளேவில் அசத்தும் ககிசோ ரபாடா!

சிகரெட் புகைத்து மீண்டும் சர்ச்சையில் ககிசோ ரபாடா! விடியோ வைரல்!!

அதிக விக்கெட்டுகள்: பர்பிள் கேப் வென்ற அன்ஷுல் கம்போஜ்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK




