ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜோஹன்ஸ்பெர்க் சூப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளராக அல்பி மோர்க்கல் நியமனம்!

ஜோஹன்ஸ்பெர்க் சூப்பர் கிங்ஸின் புதிய தலைமைப் பயிற்சியாளராக அல்பி மோர்க்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

Albie Morkel

அல்பி மோர்க்கல் - படம் | ஜோஹன்ஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் (எக்ஸ்)

Published On :30 ஜூலை 2026, 7:23 pm IST

ஜோஹன்ஸ்பெர்க் சூப்பர் கிங்ஸின் புதிய தலைமைப் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் அல்பி மோர்க்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடரில் ஜோஹன்ஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை நிறைவடைந்த 4 சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஜோஹன்ஸ்பெர்க் சூப்பர் கிங்ஸால், கோப்பையை மட்டும் வெல்ல முடியவில்லை.

ஜோஹன்ஸ்பெர்க் சூப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஸ்டீஃபன் பிளெமிங், அண்மையில் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார். இதனையடுத்து, அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், ஜோஹன்ஸ்பெர்க் சூப்பர் கிங்ஸின் புதிய தலைமைப் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் அல்பி மோர்க்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஜோஹன்ஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் தரப்பில் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது: ஜோஹன்ஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அல்பி மோர்க்கல் நியமிக்கப்பட்டுள்ளார். சூப்பர் கிங்ஸ் குடும்படுத்தின் மதிப்புமிக்க வீரர்களில் ஒருவரான அல்பி மோர்க்கலின் அனுபவம் அணிக்கு உதவியாக இருக்கும். அவரது தலைமையின் கீழ் புதிய அத்தியாயத்தைத் தொடங்க ஆவலாக உள்ளோம் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அல்பி மோர்க்கல் பேசியதாவது: ஜோஹன்ஸ்பெர்க் சூப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரராக விளையாடியதிலிருந்து, தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடரில் ஜேஎஸ்கே அணியை தலைமைப் பயிற்சியாளராக வழிநடத்தவுள்ளது உண்மையில் சிறப்பானது என்றார்.

கடந்த 2004-15 ஆம் ஆண்டு இடைவெளியில் தென்னாப்பிரிக்க அணிக்காக 109 போட்டிகளில் விளையாடியுள்ள அல்பி மோர்க்கல், 1412 ரன்கள் குவித்துள்ளார். அவர் 77 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

மேலும், கடந்த 2008-2016 ஆம் ஆண்டு இடைவெளியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அல்பி மோர்க்கல் அங்கம் வகித்தார். அவர் சிஎஸ்கேவில் விளையாடியபோது, சிஎஸ்கே இரண்டு சாம்பியன் பட்டங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

Summary

Albie Morkel has been appointed as the new head coach of the Johannesburg Super Kings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.