ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கடைசி டி20: சூர்யவன்ஷி அரைசதம் விளாசல்; ஜிம்பாப்வேவுக்கு 193 ரன்கள் இலக்கு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்துள்ளது.

Vaibhav Suryavanshi smashing the ball to the boundary.

பந்தை பவுண்டரிக்கு விளாசும் வைபவ் சூர்யவன்ஷி - படம் | பிசிசிஐ

Published On :26 ஜூலை 2026, 6:09 pm IST

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (ஜூலை 26) நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

வைபவ் சூர்யவன்ஷி அதிரடி; ஜிம்பாப்வேவுக்கு 193 ரன்கள் இலக்கு!

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். அபிஷேக் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனையடுத்து, இஷான் கிஷன் மற்றும் சூர்யவன்ஷி ஜோடி சேர்ந்தனர். இஷான் கிஷன் நிதானமாக விளையாட சூர்யவன்ஷி அதிரடியில் மிரட்டினார். இஷான் கிஷன் 26 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும்.

அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி அரைசதம் விளாசி அசத்தினார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 49 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து வெஸ்லி மத்வீர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 18 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 11* ரன்களும், ரிங்கு சிங் 25 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்துள்ளது.

ஜிம்பாப்வே தரப்பில் பிராட் ஈவன்ஸ் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கேப்டன் சிக்கந்தர் ராஸா,வெஸ்லி மத்வீர், மற்றும் பிளெஸ்ஸிங் முசராபானி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.

Summary

In the final T20 match against Zimbabwe, the Indian team scored 192 runs for the loss of 5 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.