
ஆஷஸ் தொடரை இந்தியாவில் நடத்த திட்டமிடும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்?
ஆஷஸ் டெஸ்ட் தொடரை இந்தியாவில் நடத்த வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஷஸ் கோப்பையுடன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோ ரூட் (கோப்புப் படம்)
ஆஷஸ் டெஸ்ட் தொடரை இந்தியாவில் நடத்த வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ் தொடருக்கான அட்டவணை அண்மையில் வெளியானது. 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் அடுத்தாண்டு இங்கிலாந்தில் நடத்தப்படவுள்ளது. இந்தத் தொடரானது அடுத்தாண்டு ஜூன் 18 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 2 வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில், ஆஷஸ் டெஸ்ட் தொடர் எதிர்காலத்தில் இந்தியாவில் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முதன்மை இயக்குநர் டோட் கிரீன்பெர்க் பேசியதாவது: நாங்கள் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் நட்புடன் பழகி வருகிறோம். இந்த இரண்டு கிரிக்கெட் வாரியங்களுடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் உறவு வலுவாக உள்ளது.
ஆஷஸ் தொடரை இந்தியாவில் நடத்துவதற்கு எங்களிடம் தற்போது எந்தவொரு திட்டமும் இல்லை. ஆனால், எதிர்காலத்தில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவுகளை எடுப்போம். இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் வலுவாக உள்ளது. அதனை இனிவரும் காலங்களிலும் வலிமையானதாக மாற்றுவோம் என்றார்.
ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி சென்னையில் நடைபெறும் என்பது அண்மையில் உறுதியானதும், அதற்கான பணிகளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Summary
Reports suggest there is a possibility of the Ashes Test series being held in India.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






