ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வெறும் மூன்று போட்டிகளில் வைபவ் சூர்யவன்ஷியை விமர்சிப்பது நியாயமல்ல: ஜிம்பாப்வே கேப்டன்

வைபவ் சூர்யவன்ஷியை சரியாக பயன்படுத்தினால் ஒரு தலைமுறைக்கான வீரராக உருவாகும் திறமை அவரிடம் இருப்பதாக ஜிம்பாப்வே அணியின் கேப்டன் தெரிவித்துள்ளார்.

Vaibhav Suryavanshi

வைபவ் சூர்யவன்ஷி - படம் | பிசிசிஐ

Published On :21 ஜூலை 2026, 6:08 pm IST

வைபவ் சூர்யவன்ஷியை சரியாக பயன்படுத்தினால் ஒரு தலைமுறைக்கான வீரராக உருவாகும் திறமை அவரிடம் இருப்பதாக ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை மறுநாள் (ஜூலை 23) தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நடைபெறுகிறது.

ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். இருப்பினும், அவர் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் களமிறக்கப்படவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடிய அவர் 14, 13 மற்றும் 15 ரன்கள் முறையே எடுத்தார். அவர் விளையாடிய முதல் மூன்று சர்வதேசப் போட்டிகளில் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியவில்லை. இந்த சூழலில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வைபவ் சூர்யவன்ஷி ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ளார்.

இந்த நிலையில், வைபவ் சூர்யவன்ஷியை சரியாக பயன்படுத்தினால் ஒரு தலைமுறைக்கான வீரராக உருவாகும் திறமை அவரிடம் இருப்பதாக ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: வைபவ் சூர்யவன்ஷி மிகவும் திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர். 15 வயது சிறுவன் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலேயே அவர் மீது விமர்சனங்களை வைப்பது நியாயமாக இருக்காது. வைபவ் சூர்யவன்ஷியைச் சுற்றி நிறைய நல்ல மூத்த வீரர்கள் இருப்பதாக நினைக்கிறேன். அவர் சரியாக வழிநடத்தப்பட்டால், அவரால் கண்டிப்பாக ஒரு தலைமுறைக்கான வீரராக உருவாக முடியும் என நினைக்கிறேன் என்றார்.

Summary

The Zimbabwe captain has stated that if Vaibhav Suryavanshi is utilized correctly, he has the potential to become a generational player.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.