ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அழுத்தத்தை இப்படிதான் கையாள்கிறேன்; ரகசியம் பகிர்ந்த ஷுப்மன் கில்!

அழுத்தமான சூழல்களை திறம்பட கையாள்வது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் ரகசியம் பகிர்ந்துள்ளார்.

Shubman Gill returns to the pavilion.

பெவிலியன் திரும்பும் ஷுப்மன் கில் - படம் | பிசிசிஐ

Published On :19 ஜூலை 2026, 5:48 pm IST

அழுத்தமான சூழல்களை திறம்பட கையாள்வது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் ரகசியம் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் வென்ற நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி லார்ட்ஸ் திடலில் இன்று (ஜூலை 19) நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வெளிப்புறக் காரணிகளில் இருந்து விலகி இருப்பது ஆடுகளத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அழுத்தமான சூழல்களை திறம்பட கையாள உதவுவதாக ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அழுத்தமான சூழல்களைத் திறம்பட கையாள என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்களுக்கு கவனம் கொடுப்பேன். வெளிப்புற காரணிகளால் ஏற்படும் விஷயங்கள் என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. வெளிப்புற காரணிகள் குறித்து கவலைப்படாமல் போட்டியில் கவனம் செலுத்தினால் நேர்மறையான முடிவுகள் கிடைக்கும் என்றார்.

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை இழந்த நிலையில், ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது.

Summary

Indian team captain Shubman Gill has shared the secret to effectively handling high-pressure situations.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.