ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

டெஸ்ட் போட்டிகளில் வீரர்கள் உடல் தகுதியுடன் ரிஸ்க் எடுக்க முடியாது: ஷுப்மன் கில்

டெஸ்ட் போட்டிகளில் வீரர்களின் உடல் தகுதியுடன் ரிஸ்க் எடுக்க முடியாது என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

Indian team captain Shubman Gill

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் - படம் | பிசிசிஐ

Published On :14 ஆகஸ்ட் 2026, 5:26 pm IST

டெஸ்ட் போட்டிகளில் வீரர்களின் உடல் தகுதியுடன் ரிஸ்க் எடுக்க முடியாது என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இலங்கை இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (ஆகஸ்ட் 15) முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி காலேவில் நாளை தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியில் நீடிக்க இரண்டு அணிகளுக்கும் இந்த தொடர் மிகவும் முக்கியமானதாகும்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் டாப் ஆர்டர் பேட்டர் சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டிருந்தனர். பின்னர், அவர்கள் இருவரும் காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து விலகினர்.

இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் வீரர்களின் உடல் தகுதியுடன் ரிஸ்க் எடுக்க முடியாது என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சாய் சுதர்சனின் உடல் தகுதியை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர்கள் ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள். இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாட சாய் சுதர்சன் தயாராக இருந்த நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டது துரதிருஷ்டவசமானது.

சாய் சுதர்சனுக்கு தொடர்ச்சியாக ஸ்கேன்கள் எடுக்கப்பட்டன. இருப்பினும், அசௌகரியம் இருந்ததால் அவர் தொடரிலிருந்து விலகினார். சில நேரங்களில் அணி நிர்வாகம் வீரர்கள் தரப்பிலிருந்து யோசித்து சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். டி20 அல்லது ஒருநாள் போட்டிகளாக இருந்தால் பரவாயில்லை. ஆனால், டெஸ்ட் போட்டியில் 5 நாள்கள் விளையாட வேண்டும். அதனால், டெஸ்ட் போட்டியில் வீரர்களை வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றார்.

Summary

Indian team captain Shubman Gill has stated that no risks can be taken regarding players' fitness in Test matches.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.