ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஃபிளெமிங் விலகல்: சிஎஸ்கே அணிக்கு ஆலோசகராகும் தோனி?

முன்னாள் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ். தோனி அந்த அணிக்கே ஆலோசகராக நியமிக்கப்பட இருப்பது குறித்து...

ms dhoni

எம்.எஸ். தோனி - படம்: எக்ஸ் / சிஎஸ்கே

Published On :15 ஜூலை 2026, 8:27 pm IST

முன்னாள் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ். தோனி அந்த அணிக்கே ஆலோசகராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2026 வரை தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் ஃப்ளெமிங் நீடித்து வந்தார். சமீபத்தில் இவர் விலகுவதாக அறிவித்தார்.

இவரின் தலைமையின் கீழ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை ஐபிஎல் கோப்பைகளையும், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ளது.

12 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதிப் பெற்றதுடன், 10 முறை ஐபிஎல் இறுதிப் போட்டிகளுக்குச் சென்றுள்ளது. இதெல்லாம் எம்.எஸ். தோனி கேப்டனாக இருக்கும்போது நடந்ததால் ஏமாற்றும் பயிற்சியாளர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, ஃபிளெமிங் விலகிய பிறகு சிஎஸ்கே அணிக்கு யார் பயிற்சியாளர் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் அஸ்வின், ஹேமங் பதானி, மெக்கல்லம் எனப் பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், எம்.எஸ். தோனி ஆலோசகராக (Mentor) நியமிக்கப்பட இருப்பதாகவும் டிவைன் பிராவோ பயிற்சியாளர் பட்டியலில் இணைவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சிஎஸ்கே அணி 2023ல் ஐபிஎல் கோப்பை வென்றிருந்தது. அதன்பிறகு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இருக்கிறார். பிளே ஆஃப் கூட முன்னேறாமல் தவித்து வரும் அணிக்கு புதிய பயிற்சியாளர் தேவைப்படுகிறது.

எம்.எஸ். தோனிக்கு 45 வயதாகிறது; முட்டி வலியால் கடந்த சீசனில் விளையாடவில்லை. அதனால், அவர் ஆலோசகராக வந்தால் அணிக்கு உதவியாக இருக்குமென ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்துகூறி வருகிறார்கள்.

Summary

Fleming to step down: Will Dhoni become CSK's consultant?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.