ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

லார்ட்ஸ் திடலில் சதம் விளாசி சாதனை படைத்த இந்திய வீராங்கனை!

இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் திடலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி இந்திய வீராங்கனை யாஷ்திகா பாட்டியா சாதனை படைத்தார்.

Yastika Bhatia expressed her joy after smashing a century.

சதம் விளாசிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய யாஷ்திகா பாட்டியா - படம் | பிசிசிஐ

Published On :13 ஜூலை 2026, 6:49 pm IST

இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் திடலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி இந்திய வீராங்கனை யாஷ்திகா பாட்டியா சாதனை படைத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் லார்ட்ஸ் திடலில் முதல் முறையாக மகளிர் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற்ற இந்த வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் யாஷ்திகா பாட்டியா சதம் விளாசி அசத்தினார். அவர் 158 பந்துகளில் 113 ரன்கள் (14 பவுண்டரிகள்) எடுத்தார். இந்த சதத்தின் மூலம் லார்ட்ஸ் திடலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசிய முதல் வீராங்கனை என்ற பெருமையை யாஷ்திகா பாட்டியா பெற்றுள்ளார்.

லார்ட்ஸ் திடலில் சதம் விளாசி சாதனை படைத்த பிறகு யாஷ்திகா பாட்டியா பேசியதாவது: லார்ட்ஸ் திடலில் சதம் விளாசிய முதல் வீராங்கனை என்ற சாதனை நம்பமுடியாததாக இருக்கிறது. ஏனெனில், ஆறு மாதங்களுக்கு முன்பு என்னிடம் உங்களது பெயர் லார்ட்ஸ் திடலில் உள்ள சாதனையாளர்களுடன் இடம்பெறும் எனக் கூறியிருந்தால், நம்பியிருக்க மாட்டேன். என்னுடைய சிறந்த ஆட்டம் இனிமேல்தான் வரப்போகிறது. லார்ட்ஸ் திடலில் சதம் விளாசியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

Summary

Indian player Yastika Bhatia has achieved a milestone by scoring a century in the Test match against England at Lord's.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.