ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறும் இங்கிலாந்து வீராங்கனை!

இந்தியாவுக்கு எதிராக லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து வீராங்கனை ஹீதர் நைட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Published On :12 ஜூலை 2026, 3:56 pm IST

இந்தியாவுக்கு எதிராக லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து வீராங்கனை ஹீதர் நைட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்தைக் காட்டிலும் 269 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஹீதர் நைட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.

அண்மையில் இங்கிலாந்து வீராங்கனை டம்மி பீமௌண்ட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த நிலையில், தற்போது அந்த வரிசையில் ஹீதர் நைட்டும் இணைந்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக இதுவரை 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹீதர் நைட் 976 ரன்களும், 159 ஒருநாள் போட்டிகளில் 4372 ரன்களும், 145 டி20 போட்டிகளில் 2656 ரன்களும் எடுத்துள்ளார்.

Summary

England player Heather Knight is retiring from international cricket with the ongoing Test match against India at Lord's.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.