ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வங்கதேசத்தை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய ஜிம்பாப்வே!

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Zimbabwe players rejoicing after taking a wicket.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜிம்பாப்வே வீரர்கள் - படம்| AP

Published On :9 ஜூலை 2026, 10:08 pm IST

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே - வங்கதேசம் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (ஜூலை 9) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே முதலில் விளையாடியது.

பென் கரண் சதம் விளாசல்; வங்கதேசத்துக்கு 248 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரர் பென் கரண் சதம் விளாசி அசத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் 135 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அதிரடியாக விளையாடிய பிராட் ஈவன்ஸ் 38 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். சிக்கந்தர் ராஸா 33 ரன்களும், வெஸ்லி மத்வீர் 15 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

வங்கதேசம் தரப்பில் டஸ்கின் அகமது மற்றும் கேப்டன் மெஹிதி ஹாசன் மிராஸ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். நஹித் ராணா மற்றும் ரிஷாத் ஹொசைன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

தொடரை வென்ற ஜிம்பாப்வே!

248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம், 48.1 ஓவர்களில் 234 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேச அணியில் அதிகபட்சமாக தௌகித் ஹிரிடாய் 60 ரன்களும், தன்சித் ஹாசன் தமிம் 57 ரன்களும் எடுத்தனர். நுருல் ஹாசன் 38 ரன்கள், கேப்டன் மெஹிதி ஹாசன் மிராஸ் 27 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஜிம்பாப்வே தரப்பில் ரிச்சர்ட் நிகராவா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிளெஸ்ஸிங் முசராபானி மற்றும் பிராட் ஈவன்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், சிக்கந்தர் ராஸா, பிரையன் பென்னட் மற்றும் வெஸ்லி மத்வீர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசிய பென் கரண் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Summary

Zimbabwe won the second ODI against Bangladesh by 13 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.