ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கடைசி ஒருநாள்: 199 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஜிம்பாப்வே; ஆறுதல் வெற்றி பெறுமா வங்கதேசம்?

வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 199 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

Wesley Madhevere elated after smashing a half-century.

அரைதம் விளாசிய மகிழ்ச்சியில் வெஸ்லி மத்வீர் - படம் | ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Published On :11 ஜூலை 2026, 4:56 pm IST

வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 199 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

ஜிம்பாப்வே மற்றும் வங்கதேசம் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (ஜூலை 11) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே முதலில் விளையாடியது.

வெஸ்லி மத்வீர், பிராட் ஈவன்ஸ் அரைசதம்; வங்கதேசத்துக்கு 200 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 48.1 ஓவர்களில் 199 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அந்த அணியில் வெஸ்லி மத்வீர் மற்றும் பிராட் ஈவன்ஸ் இருவரும் அரைசதம் எடுத்து அசத்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்லி மத்வீர் 74 பந்துகளில் 75 ரன்களும் (5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்), பிராட் ஈவன்ஸ் 43 பந்துகளில் 50 ரன்களும் (5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்தனர்.

அவர்களைத் தொடர்ந்து, இன்னோசண்ட் கையா 25 ரன்களும், கேப்டன் சிக்கந்தர் ராஸா 11 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

வங்கதேசம் தரப்பில் சோரிஃபுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டஸ்கின் அகமது மற்றும் தன்விர் இஸ்லாம் தலா இரண்டு விக்கெட்டுகளையும், முகமது சாய்ஃபுதின் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி களமிறங்குகிறது.

Summary

Batting first in the third ODI against Bangladesh, the Zimbabwe team was bowled out for 199 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.