சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் புதிய சாதனைப் படைத்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான டி20 தொடர் நேற்று (ஜூலை 1) முதல் தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையில் ரிவர்சைடு திடலில் நேற்று நடைபெற்ற முதல் போட்டி மழை காரணமாக நிறைவடையவில்லை.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 68 ரன்கள் எடுத்தார்.
Mt. 5ï¸â£k and aiming to go higher â°ï¸#TeamIndia Captain Shreyas Iyer got to a special landmark in international cricket ð«¡#ENGvIND | @ShreyasIyer15 pic.twitter.com/oOu1J7O500
— BCCI (@BCCI) July 2, 2026
நேற்றையப் போட்டியில் 68 ரன்கள் எடுத்ததன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்து ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை படைத்துள்ளார்.
இதுவரை இந்திய அணிக்காக 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷ்ரேயாஸ் ஐயர், 811 ரன்கள் எடுத்துள்ளார். 79 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3035 ரன்களும், 54 டி20 போட்டிகளில் விளையாடி 1185 ரன்களும் எடுத்துள்ளார்.
அண்மையில் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Indian team captain Shreyas Iyer has set a new record in international cricket.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










