மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

சுழல் பந்துவீச்சாளர் தேர்வு செய்யாதது ஏன்? ஆஸி. பயிற்சியாளர் விளக்கம்!

சிட்னி டெஸ்ட்டில் சுழல் பந்துவீச்சாளர் தேர்வு செய்யாதது குறித்து...

News image
டாட் மர்ஃபி பிட்சை பார்வையிடும் காட்சி... - படம்: ஏபி
Updated On :4 ஜனவரி 2026, 6:49 am

இணையதளச் செய்திப் பிரிவு

சிட்னி டெஸ்ட்டில் சுழல் பந்துவீச்சாளர் தேர்வு செய்யாதது குறித்து ஆஸி. அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு பதிலளித்துள்ளார்.

கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

இந்தப் போட்டியில் டாட் மர்ஃபி விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக ப்யூ வெப்ஸ்டர் களமிறக்கப்பட்டுள்ளார்.

மெல்பர்ன் டெஸ்ட்டிலும் சுழல்பந்து வீச்சாளர் இல்லாமலே ஆஸி. களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஆஸி. அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு கூறியதாவது:

சாதாரணமாக டாட் மர்ப்பி விளையாடி இருப்பார். ஆனால், இது ஸ்டீவ் ஸ்மித்தின் முடிவு.

சுழல் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் விளையாடப் போவதில்லை. எனக்கும் டாட் மர்ப்பி பிடிக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.