டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 ஆட்டத்தில், இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலமாக இங்கிலாந்து, குரூப் 2-இல் முதலிடத்துடன் நிறைவு செய்தது. 2-ஆம் இடத்திலிருக்கும் நியூஸிலாந்தின் அரையிறுதி வாய்ப்பு, இலங்கை - பாகிஸ்தான் சனிக்கிழமை மோதும் ஆட்டத்தின் முடிவில் தீர்மானமாகும். அதில் பாகிஸ்தான் தோல்வி கண்டால், நியூஸிலாந்து அரையிறுதிக்கு முன்னேறும்.
முன்னதாக இந்த ஆட்டதில், நியூஸிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் சேர்க்க, இங்கிலாந்து 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற நியூஸிலாந்து, பேட்டிங்கை தேர்வு செய்தது. அணியின் தரப்பில் அதிகபட்சமாக, கிளென் ஃபிலிப்ஸ் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 39, டிம் செய்ஃபர்ட் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
ஃபின் ஆலன் 3 சிக்ஸர்களுடன் 29 ரன்களுக்கு வெளியேற, ரச்சின் ரவீந்திரா 1 பவுண்டரியுடன் 11, மார்க் சாப்மேன் 2 பவுண்டரிகளுடன் 15, டேரில் மிட்செல் 3 ரன்களுக்கு விடைபெற்றனர்.
கோல் மெக்கான்சி 2 பவுண்டரிகளுடன் 14 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஓவர்கள் முடிவில் கேப்டன் மிட்செல் சேன்ட்னர் 1 சிக்ஸருடன் 9, மேத்யூ ஹென்றி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இங்கிலாந்து பெüலர்களில் ரெஹான் அகமது, வில் ஜாக்ஸ், ஆதில் ரஷீத் ஆகியோர் தலா 2, லியம் டாசன் 1 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 160 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இங்கிலாந்து அணியில், ஃபில் சால்ட் 2, ஜாஸ் பட்லர் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். மிடில் ஆர்டர் பேட்டர்கள் ரன்கள் சேர்த்து ஸ்கோரை பலப்படுத்தினர்.
அதில் கேப்டன் ஹேரி புரூக் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 26, ஜேக்கப் பெத்தெல் 4 பவுண்டரிகளுடன் 21, டாம் பேன்டன் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33, சாம் கரன் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 24 ரன்கள் சேர்த்து வெளியேறினர்.
முடிவில், வில் ஜாக்ஸ் 18 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தார். ரெஹான் அகமது 1 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்களுடன் துணை நின்றார்.
நியூஸிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 3, மேத்யூ ஹென்றி, லாக்கி ஃபெர்குசென், கிளென் ஃபிலிப்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
Summary
England vs New Zealand, 49th Match, Super 8 England won by 4 wkts
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோலி, படிக்கல் பங்களிப்பில் பெங்களூரு வெற்றி: சாய் சுதா்சன் சதம் வீண்

ஜடேஜா, ஆர்ச்சர், பிரிஜேஷ் அசத்தல்: லக்னௌவை வீழ்த்தியது ராஜஸ்தான்

ராசிக், புவனேஷ்வா், கோலி அசத்தல்- லக்னௌவை வென்றது பெங்களூரு
இஷான் கிஷண் அதிரடி; பிரஃபுல், சகிப் அபாரம் - ராஜஸ்தானை வென்றது ஹைதராபாத்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

