டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 256 ரன்கள் எடுத்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் இன்று (பிப்ரவரி 26) நடைபெற்று வரும் சூப்பர் 8 ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.
அபிஷேக் சர்மா, ஹார்திக் பாண்டியா அரைசதம்! இமாலய இலக்கு!
முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்துள்ள இரண்டாவது அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கினர். இந்த இணை அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 48 ரன்கள் சேர்த்தது. சஞ்சு சாம்சன் 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன் பின், அபிஷேக் சர்மாவுடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியைத் தொடர்ந்தது. இஷான் கிஷன் 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கும். நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் ரன்கள் குவிக்கத் தடுமாறிய அபிஷேக் சர்மா, அதிரடியாக அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 30 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் 13 பந்துகளில் அதிரடியாக 33 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பின், ஹார்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியைத் தொடர்ந்தது.
ஹார்திக் பாண்டியா 23 பந்துகளில் 50 ரன்களும் (2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) திலக் வர்மா 16 பந்துகளில் 44 ரன்களும் (3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.
ஜிம்பாப்வே தரப்பில் ரிச்சர்ட் நிகராவா, பிளெஸ்ஸிங் முஸராபானி, டினோடெண்டா மபோசா மற்றும் சிக்கந்தர் ராஸா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.
Summary
India, batting first, scored runs in the Super 8 round match against Zimbabwe in the T20 World Cup.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூவர் அரைசதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 3-வது வெற்றி!

லக்னௌவுக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

முதல் போட்டியிலேயே சொதப்பிய சிஎஸ்கே; பந்துவீச்சில் அசத்திய ராஜஸ்தான் ராயல்ஸ்!
விராட் கோலி, படிக்கல் அதிரடி அரைசதம்! ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கியது ஆர்சிபி!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை



