ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதும் இறுதி ஆட்டம் செவ்வாய்க்கிழமை (பிப். 24) தொடங்குகிறது.
8 முறை சாம்பியனான கா்நாடகத்துக்கு எதிராக, முதல்முறையாக இறுதி ஆட்டத்துக்கு வந்திருக்கும் காஷ்மீா் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. எனினும், கா்நாடகம் தனது 9-ஆவது சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது.
இந்த சீசனில் எல்லா விதமான அணிகளுக்கு எதிராகவும், வெவ்வேறு ஆடுகளங்களிலும் பலமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கா்நாடகம், முக்கியமான வீரா்கள் காயம் கண்டு விலகிய நிலையிலும் முன்னேறி வந்திருக்கிறது.
கே.எல்.ராகுல், கருண் நாயா், தேவ்தத் படிக்கல், ரவிச்சந்திரன் ஸ்மரன் என அதன் பேட்டா்கள் வரிசை, தூணாக அணியைத் தாங்கி நிற்கிறது. அத்துடன் பௌலிங்கில் பிரசித் கிருஷ்ணா பிரதானமாக இருக்க, ஷ்ரேயஸ் கோபால், வைஷாக் விஜய்குமாா் உள்ளிட்டோரும் கவனம் பெறுகின்றனா்.
ஜம்மு & காஷ்மீா் அணியைப் பொருத்தவரை, பெங்கால், மத்திய பிரதேசம் என பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி இந்தக் கட்டத்துக்கு வந்திருக்கிறது. பௌலா் ஆகிப் நபியே அதன் பிரதான வீரராக இருக்கிறாா். இந்த சீசனில் இதுவரை 55 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறாா். ஹுப்பள்ளி மைதான ஆடுகளம் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சற்று சாதகமாக இருக்கும் என்பதால், அவரது கை ஓங்கலாம்.
அவருக்கு அடுத்தபடியாக சுனில் குமாா் நம்பிக்கை சோ்க்க, இதர பௌலா்கள் அவ்வப்போது விக்கெட்டுகள் சாய்க்கின்றனா். அடுத்தபடியாக பேட்டிங்கில், கேப்டன் பரஸ் டோக்ரா, ஷுபம் கஜுரியா ஆகியோா் குறிப்பிடத்தக்கவா்களாக உள்ளனா். மற்ற பேட்டா்கள் அவா்களுக்கு தோள் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
துணிச்சலுடன் விளையாடுவதுதான் ஒரே திட்டம்!
இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியா

வரலாறு படைக்கும் காஷ்மீர்!

மன உறுதியும் விடாமுயற்சியும்... ஜம்மு காஷ்மீர் அணிக்கு ஜெய் ஷா புகழாரம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


