நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தி ஹன்ட்ரட் ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்களை தேர்வு செய்யாவிட்டால் அவமானம்..! ஹாரி புரூக் பேட்டி!

தி ஹன்ட்ரட் லீக்கில் பாகிஸ்தான் வீரர்களைப் பற்றி ஹாரி புரூக் பேசியிருப்பதாவது...

News image
ஹாரி புரூக்.- படம்: ஏபி
Updated On :21 பிப்ரவரி 2026, 9:37 am

இணையதளச் செய்திப் பிரிவு

தி ஹன்ட்ரட் லீக்கில் பாகிஸ்தான் வீரர்களை தேர்வு செய்யவில்லை எனில் அது மிகவும் அவமானகரமானது என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பேசியுள்ளார்.

தி ஹன்ட்ரட் லீக்கில் இந்தியாவிற்கு சொந்தமான அணிகளில் பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி ஹன்ட்ரட் லீக்கிலும் புறக்கணிக்கப்படும் பாகிஸ்தான் வீரர்கள்

இங்கிலாந்தில் தி ஹன்ட்ரட் (100 பந்துகள்) கொண்ட லீக் கடந்த 2021-ல் தொடங்கப்பட்டது. டி20க்கு மாற்றாக புதியதாக இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த லீக்கில் இந்தியாவுக்குச் சொந்தமான மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ், எம்ஐ லண்டன், சௌதர்ன் பிரேவ், சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிகள் இருக்கின்றன. இதற்கான ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் நடந்த 2008 தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

இதேபோல் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ20 லீக்கிலும் பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். சில ஐஎல்டி20 அணிகளும் பாகிஸ்தான் வீரர்களை இதுவரை எடுத்ததே இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

பாகிஸ்தான் வீரர்களுக்கு அவமானம்

இந்நிலையில் இது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக்கிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதில் அவர் பேசியிருப்பதாவது:

எங்களது முழு கவனமும் டி20 உலகக் கோப்பையில்தான் இருக்கிறது. உண்மையில் அதெல்லாம் எங்களது வேலை கிடையாது.

சொல்லவேண்டுமானால், பாகிஸ்தான் பல ஆண்டுகளாக நல்ல கிரிக்கெட் விளையாடும் அணியாக இருந்து வருகிறது. அநேகமாக 50, 60 வீரர்கள் இந்த ஏலத்தில் இருக்கிறார்கள். அவர்கள் யாரையுமே எடுக்கவில்லை எனில் அது அவர்களுக்கு அவமானகரமானதாக இருக்கும்.

நல்ல வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களால் கூட்டமும் நன்றாக குவியும் என்றார்.

தி ஹன்ட்ரட் லீக்கின் புதிய சீசன் வரும் ஜூலை 21 முதல் ஆக.16ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏலம் மார்ச்11 -12ஆம் தேதிகளில் நடைபெறுகின்றன.

summary

It would be "a shame" if Pakistan cricketers are excluded from the The Hundred, England's limited-over skipper Harry Brook said here on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.