டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆஸ்திரேலியாவை நொறுக்க இதுதான் சரியான நேரம்..! ஓமன் கேப்டன் நம்பிக்கை!

கடைசி லீக் போட்டியில் விளையாடும் ஓமன் கேப்டன் ஜிதேந்தர் சிங் பேசியது குறித்து...

News image
ஆஸ்திரேலிய அணி, ஓமன் கேப்டன். - படங்கள்: ஏபி
Updated On :21 பிப்ரவரி 2026, 12:41 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஓமன் கேப்டன் ஜிதேந்தர் சிங் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த இதுதான் சரியான நேரம் எனக் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி மிகவும் மோசமாக விளையாடி, டி20 உலகக் கோப்பை 2026-இன் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாமல் இருக்கிறது.

ஓமன் அணி இதுவரை ஒருமுறைக் கூட வெற்றிபெறாத நிலையில், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

கடைசி போட்டியில் ஓமனும் ஆஸ்திரேலியாவும்

லீக்கின் கடைசி போட்டியாக ஓமனும் ஆஸ்திரேலியாவும் இன்றிரவு 7 மணிக்கு மோதுகின்றன. ஓமன் அணியின் கேப்டன் ஜிதேந்தர் சிங் பேசியிருப்பதாவது:

ஆஸ்திரேலியாவை வெல்ல 100 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது. எங்களது வீரர்களும் ஆவலுடன் இருக்கிறார்கள்.

ஏனெனில் சர்வதேச டி20 கிரிக்கெட் என்பதே உந்தமும் தருணமும்தான். அந்தத் தருணத்தில் சரியாக விளையாடினால் எதை வேண்டுமானாலும் செய்து முடிக்கலாம்.

ஆஸ்திரேலியாவை நொறுக்க இதுதான் சரியான நேரம்

இந்தத் தருணத்தில் ஆஸ்திரேலியா சரியாக விளையாடவில்லை. அதனால், இதுதான் அந்த அணியை நொறுக்க சரியான நேரம்.

ஆஸ்திரெலியாவும் உலகக் கோப்பையை விட்டு வெளியேறிவிட்டார்கள். எங்கள் வீரர்களும் நல்ல கிரிக்கெட் விளையாட முயற்சிக்கிறார்கள். ஆனால், துரதிஷ்டவசமாக அது சரியாக செல்லவில்லை.

எங்கள் வீரர்கள்ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியைப் பெற ஆவலுடன் இருக்கிறார்கள் என்றார்.

ஆஸ்திரேலிய அணி 1 போட்டியில் மட்டுமே வென்று, 2 போட்டிகளில் தோல்வியுற்று அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறுகிறது.

Oman captain Jatinder Singh said that Australia are not doing well in the T20 World Cup, so the time is right “to crush them.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.