டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

டி20 உலகக் கோப்பை: ஹேசில்வுட்டுக்குப் பதிலாக மாற்று வீரராக ஸ்டீவ் ஸ்மித்!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ஜோஷ் ஹேசில்வுட்டுக்குப் பதிலாக ஸ்டீவ் ஸ்மித் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

News image
ஸ்டீவ் ஸ்மித் (கோப்புப் படம்)
Updated On :16 பிப்ரவரி 2026, 11:06 am

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ஜோஷ் ஹேசில்வுட்டுக்குப் பதிலாக ஸ்டீவ் ஸ்மித் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் 10-வது சீசன் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இலங்கையில் இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியில் தொடர இலங்கைக்கு எதிரான இன்றையப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது.

இந்த நிலையில், காயம் காரணமாக உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகியுள்ள ஜோஷ் ஹேசில்வுட்டுக்குப் பதிலாக மாற்று வீரராக ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து காயம் காரணமாக ஜோஷ் ஹேசில்வுட் விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக மாற்று வீரராக ஸ்டீவ் ஸ்மித் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடவில்லை. இருப்பினும், டி20 லீக் போட்டிகளில் விளையாடி அவர் சிறப்பாக ரன்கள் குவித்தார். சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ள நிலையில், ஸ்டீவ் ஸ்மித் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது அந்த அணிக்கு நல்ல விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத கேப்டன் மிட்செல் மார்ஷ், பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். அவர் ஃபீல்டிங் பயிற்சியிலும் ஈடுபட்டார். இலங்கைக்கு எதிரான இன்றையப் போட்டியில் மிட்செல் மார்ஷ் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.