/

சேப்பாக்கம் திடல் குறித்த அமெரிக்க வீரரின் வைரல் பதிவு!

அமெரிக்க கிரிக்கெட் வீரர் சென்னை திடல் பற்றி பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு குறித்து...

News image
தோனி, அலி கான். - படங்கள்: சிஎஸ்கே, யுஎஸ்ஏ கிரிக்கெட்.
Updated On :13 பிப்ரவரி 2026, 8:56 am

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்க கிரிக்கெட் வீரர் அலி கான் சென்னையில் உள்ள சேப்பாக்கம் திடல் குறித்து பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “தலையின் வீடு” எனக் குறிப்பிட்டுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் இந்தியா, இலங்கையில் கடந்த பிப்.7ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.

இதில் குரூப் ஏ பிரிவில் இருக்கும் அமெரிக்காவும் நெதர்லாந்தும் சென்னையில் இன்றிரவு (பிப்.13) மோதுகின்றன.

இதற்காக சென்னை சேப்பாக்கம் திர்டலுக்கு வந்துள்ள அலி கான் தனது இன்ஸ்டா பக்கத்தில் திடலின் புகைப்படத்தைப் பகிர்ந்து, “தலையின் வீடு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எம்.எஸ்.தோனி சிஎஸ்கே ரசிகர்களால் ’தல தோனி’ என அழைக்கப்படுகிறார். இந்த சீசனில் தோனி விளையாடுவாரா மாட்டாரா என்ற குழப்பம் சிஎஸ்கே ரசிகர்களிடம் இன்னமும் இருந்து வருகிறது.

summary

American cricketer Ali Khan posted about the Chepauk Stadium in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.