டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பாகிஸ்தானுடன் விளையாட முடியாதென நாங்கள் கூறவில்லை: சூர்யகுமார் யாதவ்

டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட இந்திய அணி தயாராக இருப்பதாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

News image
சூர்யகுமார் யாதவ்- படம் | பிடிஐ
Updated On :5 பிப்ரவரி 2026, 12:32 pm

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட இந்திய அணி தயாராக இருப்பதாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் (பிப்ரவரி 7) முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் நாளில் பாகிஸ்தான் - நெதர்லாந்து, மேற்கிந்தியத் தீவுகள் - ஸ்காட்லாந்து மற்றும் இந்தியா - அமெரிக்கா இடையேயான போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்திய அணி பிப்ரவரி 15 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடுவதாக அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வங்கதேசத்துக்கு ஆதரவாக இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி வீரர்களுக்கான விமான டிக்கெட் உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி இலங்கைக்கு செல்லவிருப்பதாகவும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தான் அணியின் முடிவு என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. அவர்களுக்கான முடிவை என்னால் எடுக்க முடிந்தால் நன்றாக இருக்கும். ஆனால், முடிவு அவர்களின் கைகளில் உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக ஆசிய கோப்பையில் நாங்கள் விளையாடினோம். மூன்று முறை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடினோம்.

நாங்கள் தெளிவாக இருக்கிறோம். உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என நாங்கள் கூறவில்லை. ஆனால், அவர்கள்தான் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டோம் என்கிறார்கள். ஐசிசி அட்டவணையில் எங்களுக்கான போட்டி இடம்பெற்றுள்ளது. எங்களது விமான பயணமும் உறுதி செய்யப்பட்டு விட்டது. நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்காக கொழும்பு செல்லவிருக்கிறோம்.

பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் நன்றாக விளையாடியுள்ளோம். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி நடைபெறும் விதமாக அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி நடுநிலையான இடத்தில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் நாங்கள் விளையாடுவோம். போட்டியை புறக்கணிப்பது பாகிஸ்தான் வீரர்களுக்கும் கடினமான முடிவாக இருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.