டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை: பாக். கேப்டன்

உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது எங்களது கட்டுப்பாட்டில் இல்லை என பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகா தெரிவித்துள்ளார்.

News image
பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அகா- படம் | AP
Updated On :5 பிப்ரவரி 2026, 1:17 pm

இணையதளச் செய்திப் பிரிவு

உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது எங்களது கட்டுப்பாட்டில் இல்லை என பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகா தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் (பிப்ரவரி 7) முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் நாளில் பாகிஸ்தான் - நெதர்லாந்து, மேற்கிந்தியத் தீவுகள் - ஸ்காட்லாந்து மற்றும் இந்தியா - அமெரிக்கா இடையேயான போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்திய அணி பிப்ரவரி 15 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடுவதாக அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வங்கதேசத்துக்கு ஆதரவாக இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது எங்களது கட்டுப்பாட்டில் இல்லை எனவும், இது பாகிஸ்தான் அரசு எடுத்த முடிவு எனவும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது எங்களது கட்டுப்பாட்டில் இல்லை. இந்த முடிவு பாகிஸ்தான் அரசு மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவு. பாகிஸ்தான் அரசு மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவினை நாங்கள் மதிக்கிறோம். அவர்கள் என்ன சொன்னாலும் அதனை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இந்தியாவுக்கு எதிராக அரையிறுதி அல்லது இறுதிப்போட்டியில் விளையாடும் சூழல் உருவானால், எங்களுடைய அரசு மற்றும் கிரிக்கெட் வாரியத்தின் அறிவுரைப்படி அப்போது செயல்படுவோம் என்றார்.

summary

Pakistan team captain Salman Ali Agha has stated that playing against India in the World Cup tournament is not within their control.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.