
கிரிக்கெட் சுவாரசியம்... பந்தை இரண்டாக வெட்டி பகிர்ந்து கொண்ட ராபின்சன் - ஜோஷ் டங்!
இங்கிலாந்து வீரர்கள் ஆலி ராபின்சன் மற்றும் ஜோஷ் டங் இருவரும் பந்தை இரண்டாக வெட்டி பகிர்ந்து கொண்டதைப் பற்றி...

ஆலி ராபின்சன் - ஜோஷ் டங். - படம்: எக்ஸ்.
இங்கிலாந்து வீரர்கள் ஆலி ராபின்சன் மற்றும் ஜோஷ் டங் இருவரும் பந்தை இரண்டாக வெட்டி பகிர்ந்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நேற்று (ஆக. 19) தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக அப்துல்லா ஷஃபீக் 104 பந்துகளில் 61 ரன்கள், இமாம் உல் ஹக் 42 ரன்களும், சௌத் ஷகீல் 5 ரன்கள், கேப்டன் சல்மான் அலி அகா 21 ரன்கள், அலி உஸ்மான் 0 ரன், முகமது ரிஸ்வான் 12 ரன்கள், குர்ரம் ஷாஷத் 14 ரன்கள் மற்றும் முகமது அப்பாஸ் 2 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.
இங்கிலாந்து தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆலி ராபின்சன் 51 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும், டங் 46 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
So, what did they do with the match ball? ð¤
— England Cricket (@englandcricket) August 19, 2026
A simple solution to a unique problem!
Click below for the full interview:
இதன் மூலம், 2006-ஆம் ஆண்டில் ஓல்ட் டிராஃபோர்டில் பாகிஸ்தானுக்கு எதிராக ஸ்டீவ் ஹார்மிசன் மற்றும் மான்டி பனேசர் ஆகியோருக்குப் பிறகு, ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஜோடி என்ற பெருமையைப் பெற்றனர்.
முதல் இன்னிங்ஸ் முடிந்த பின்னர், இங்கிலாந்து சார்பில் ஆலி ராபின்சன் மற்றும் ஜோஷ் டங்க் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், யார் போட்டிப் பந்தை வைத்துக் கொள்வது என திடீரென குழப்பம் ஏற்பட்டது.
அந்தப் பந்தை ஆளுக்குப் பாதியாக வெட்டி எடுத்துக் கொள்ளலாம் என்ற யோசனையை ராபின்சன் கூற, பின்னர் இங்கிலாந்து அணி மேலாளர் வெய்ன் பென்ட்லி, பந்தை திடல் ஊழியர்களிடம் கொண்டு சென்று, அதை இரண்டாக வெட்டி ஐந்து நிமிடங்களிலேயே வீரர்களிடம் திருப்பிக் கொடுத்தார்.
ராபி - டங் இருவரும் அந்தப் பந்தைப் பிரித்துக் கொண்டனர். கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் இரண்டு வீரர்கள் தலா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், இதுபோன்று பந்தை வெட்டி பகிர்ந்துகொள்ளும் சம்பவம் முதல்முறையாக நடைபெற்றிருக்கிறது.
Summary
Ollie Robinson and Josh Tongue split the match ball after sharing five-wicket hauls against Pakistan at Headingley. The gesture capped England's rout of Pakistan for 171 and highlighted Robinson's strong comeback.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






