ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆட்டத்தின் முதல் பந்தில் விக்கெட்; வரலாறு படைத்த ஆலி ராபின்சன்!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆட்டத்தின் முதல் பந்தில் விக்கெட்டினைக் கைப்பற்றியதன் மூலம் ஆலி ராபின்சன் வரலாறு படைத்துள்ளார்.

England fast bowler Ollie Robinson delighted after taking a wicket.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஆலி ராபின்சன் - படம் | AP

Published On :20 ஆகஸ்ட் 2026, 4:13 pm IST

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆட்டத்தின் முதல் பந்தில் விக்கெட்டினைக் கைப்பற்றியதன் மூலம் ஆலி ராபின்சன் வரலாறு படைத்துள்ளார்.

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இதனையடுத்து, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஜோ ரூட் 37 ரன்களுடனும், ஜோர்டான் காக்ஸ் 23 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

முதல் இன்னிங்ஸில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆலி ராபின்சன் மற்றும் ஜோஷ் டங் தலா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட்டினைக் கைப்பற்றி அசத்தினார் ஆலி ராபின்சன்.

இங்கிலாந்தில் கடந்த 1880 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறன்றன. ஆனால், போட்டியின் முதல் பந்தில் எந்தவொரு வீரரும் விக்கெட்டினைக் கைப்பற்றியதில்லை. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட்டினை வீழ்த்தி ஆலி ராபின்சன் வரலாறு படைத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆட்டத்தின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தப்படுவது இதற்கு முன்னதாக 11 முறை நடைபெற்றுள்ளது.

கடந்த 2019-20 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆட்டத்தின் முதல் பந்திலேயே டீன் எல்கரின் விக்கெட்டினை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Summary

Ollie Robinson has made history by taking a wicket on the very first ball of the match in the first Test against Pakistan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.