ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சதம் விளாசிய தேவ்தத் படிக்கல்!

இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தேவ்தத் படிக்கல் சதம் விளாசி அசத்தியுள்ளார்.

Devdutt Padikkal elated after smashing a century.

சதம் விளாசிய மகிழ்ச்சியில் தேவ்தத் படிக்கல் - படம் | பிசிசிஐ

Published On :8 ஆகஸ்ட் 2026, 4:29 pm IST

இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தேவ்தத் படிக்கல் சதம் விளாசி அசத்தியுள்ளார்.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

பிரதான போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக இந்தியா மற்றும் இலங்கை அணிகள் தங்களுக்குள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கிரிக்கெட் லெவன் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.

முதல் இன்னிங்ஸில் இலங்கை லெவன் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 363 ரன்கள் எடுத்திருக்கையில் டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரவிந்து ரசந்தா 71 ரன்களும், நிஷான் மதுஷ்கா 66 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் மானவ் சுதர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், குர்னூர் பிரார் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

தேவ்தத் படிக்கல் சதம்!

363 ரன்கள் எடுத்து இலங்கை அணி டிக்ளேர் செய்ய, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல் சதம் விளாசி அசத்தினார். அவர் 121 பந்துகளில் 103 ரன்கள் எடுத்தார். அதில் 14 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ரவீந்திர ஜடேஜா 63 ரன்களும், கேப்டன் கே.எல்.ராகுல் 40 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது.

Summary

Devdutt Padikkal impressed by smashing a century in the warm-up match against Sri Lanka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.