ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இந்திய அணிக்குப் பின்னடைவு... இலங்கை டெஸ்ட் தொடரிலிருந்து சாய் சுதர்சன் விலகல்!

இலங்கை டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணி வீரர் சாய் சுதர்சன் விலகியுள்ளதைப் பற்றி...

சாய் சுதர்சன்.

Published On :8 ஆகஸ்ட் 2026, 3:39 pm IST

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணி வீரர் சாய் சுதர்சன் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. இந்தத் தொடர் இந்தியாவின் சுதந்திர நாளன்று வருகிற ஆக. 15 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இந்தத் தொடருக்கு முன்னதாக, இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. இவ்விரு அணிகளும் மோதும் பயிற்சி ஆட்டம் நேற்று (ஆக. 7) காலை தொடங்கிய நிலையில், பயிற்சியில் கட்டை விரல் காயத்திலிருந்து விலகிய இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் அணியை வழிநடத்துகிறார்.

ஏற்கனவே, இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், இந்திய அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் கால் விரல் காயம் குணமடையாததால் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 103 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தத் படிக்கலுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்ப்ரீத் பும்ரா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விலகியுள்ள நிலையில், சாய் சுதர்சனும் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியதால் இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்திருக்கிறது.

Summary

Indis National  Cricket Team batter Sai Sudharsan has been ruled out of the upcoming two-match Test series against Sri Lanka due to the injury he suffered before the team's departure for the island nation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.