ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னர் - ஷிகர் தவானின் சாதனையை டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை சமன் செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 243 ரன்கள் எடுக்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தியது.
244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 129 ரன்கள் சேர்த்தது.
இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு அதிக முறை 100 ரன்களுக்கும் மேல் குவித்த தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஷிகர் தவான் இணையின் சாதனையை டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை சமன் செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னர் - ஷிகர் தவான் மற்றும் டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை இதுவரை முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கும் அதிகமாக 6-முறை குவித்துள்ளது. இன்னும் ஒரு முறை 100 ரன்களுக்கும் அதிகமாக டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை குவிக்கும் பட்சத்தில், டேவிட் வார்னர் - ஷிகர் தவான் இணையின் சாதனை முறிடியக்கப்படும்.
ஐபிஎல் தொடரில் முதல் விக்கெட்டுக்கு அதிக முறை 100 ரன்களுக்கும் மேல் குவித்த இணை
அபிஷேக் சர்மா & டிராவிஸ் ஹெட் - 6 முறை
டேவிட் வார்னர் & ஷிகர் தவான் - 6 முறை
டேவிட் வார்னர் & ஜானி பேர்ஸ்டோ - 5 முறை
ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் & விராட் கோலி - 5 முறை
ஷுப்மன் கில் & சாய் சுதர்சன் - 5 முறை
Summary
The pair of Travis Head and Abhishek Sharma has equaled the record held by David Warner and Shikhar Dhawan in the IPL series.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அபிஷேக் சர்மா எளிதாக சதங்கள் விளாசுகிறார்: புஜாரா

ஒரே நாளில் பல சாதனைகளை நிகழ்த்திய அபிஷேக் சர்மா..! டி20 கிரிக்கெட்டின் நாயகன்!

சிறப்பான ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா..! டாப் 4 இடத்தைப் பிடிக்கப்போவது யார்?

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய டேவிட் வார்னர் கைது..! பிஎஸ்எல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு



