தென்னாப்பிரிக்க மகளிரணிக்கு எதிரான நான்காவது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிரணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்திய மகளிரணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது. ஏற்கெனவே, தொடரை இழந்த இந்திய அணிக்கு 3-1 என ஆறுதல் வெற்றி கிடைத்துள்ளது.
ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்ற இந்த நான்காவது போட்டியில் டாஸ் வென்ற தெ.ஆ. அணி பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 185/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜெமிமா 43, தீப்தி சர்மா 36, ரிச்சா கோஷ் 34 ரன்கள் எடுத்தார்கள்.
அடுத்து விளையாடிய தெ.ஆ. அணி 20 ஓவர்களில் 171/9 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவின் ஆல்ரவுண்டர் பந்துவீச்சில் முதல்முறையாக தனது 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
பேட்டிங், பந்துவீச்சு என அசத்திய தீப்தி சர்மாவுக்கு ஆட்ட நாயகி விருது கிடைத்தது. கடைசி டி20 போட்டி நாளை (ஏப்.27) பெனோனியில் வில்லோமூர் பார்க்கில் நடைபெற இருக்கிறது.
Summary
All-round Deepti Sharma grabs maiden T20I fifer to carry India to 14-run over SA
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அபிஷேக் சர்மா எளிதாக சதங்கள் விளாசுகிறார்: புஜாரா

ஒரே நாளில் பல சாதனைகளை நிகழ்த்திய அபிஷேக் சர்மா..! டி20 கிரிக்கெட்டின் நாயகன்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா புதிய சாதனை!

ஐபிஎல்: விராட் கோலியின் நீண்ட கால சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


