/

புலி வந்துவிட்டது... தில்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்த மிட்செல் ஸ்டார்க்!

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் இந்தியா வந்தடைந்தது குறித்து...

News image

தில்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்த மிட்செல் ஸ்டார்க். - படங்கள்: எக்ஸ் / தில்லி கேபிடல்ஸ்.

Updated On :25 ஏப்ரல் 2026, 6:36 am

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் (36 வயது) இந்தியா வந்தடைந்தார். தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடும் இவர் தற்போது அணியில் இணைந்துள்ளார்.

காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிலேயே இருந்த மிட்செல் ஸ்டார்க், தற்போது தடையில்லாச் சான்று கிடைத்தவுடன் இந்தியாவுக்கு வந்தடைந்துள்ளார்.

ஆஷஸ் தொடரில் சிறப்பாக பந்துவீசிய ஸ்டார்க் தொடர் நாயகன் விருது வென்றார். பின்னர் பிபிஎல் தொடரிலும் விளையாடினார். 2025ல் சிறப்பாக செயல்பட்டதற்காக அவருக்கு சமீபத்தில் விஸ்டன் விருதும் வழங்கப்பட்டது.

கடந்த சீசனில் மிட்செல் ஸ்டார்க் 11 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். தற்போது தில்லி அணி புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது.

இந்த ஐபிஎல் சீசனில், மே1ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கலந்துகொள்வார் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தில்லி கேபிடல்ஸ் ”புலி வந்துவிட்டது” என மிட்செல் ஸ்டார்க் வருகைக்கு விடியோ வெளியிட்டுள்ளது. தில்லி அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Summary

Mitchell Starc joins Delhi Capitals for ipl 2026 season!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.