ஐபிஎல் 2026 சீசனின் 26ஆவது லீக் போட்டியில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
பெங்களூரு சின்னசாமி திடலில் நடைபெறும் இந்தப் போட்டியில் ஆர்சிபி அணி பச்சை நிற ஜெர்ஸியில் விளையாடுகிறது. சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் என்ற விழிப்புணர்விற்காக இந்தச் சீறுடையில் விளையாடுகிறது.
புள்ளிப் பட்டியலில் ஆர்சிபி அணி இரண்டாவது இடத்திலும் தில்லி கேபிடல்ஸ் அணி ஆறாவது இடத்திலும் இருக்கிறது. இந்தப் போட்டியில் யார் வெல்லுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அது பிளே-ஆப்ஸுக்கான போட்டியை மேலும் வலுவாக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.
இரண்டு அணிகளிலுமே மாற்றமில்லை என இரு அணிகளின் கேப்டன்களும் தெரிவித்துள்ளார்கள்.
பந்துவீச்சைத் தேர்வு செய்த அக்ஷர் படேல், ”சின்னசாமி சேஸிங் செய்வதற்கு ஏற்ற திடல்” எனக் கூறியுள்ளார். ரஜத் படிதார், “நாங்கள் பேட்டிங் செய்யவே விரும்பினோம்” என்றார்.
தில்லி கேபிடல்ஸ்: பதும் நிஸாங்கா, கே.எல்.ராகுல். சமீர் ரிஸ்வி, அக்ஷர் படேல், டெவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஆகிப் நபி, லுங்கி இங்கிடி, குல்தீப் யாதவ், நடராஜன், முகேஷ் குமார்.
ஆர்சிபி: விராட் கோலி, பிலிப் சால்ட், ரஜத் படிதார், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், சுயாஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட்.
Summary
Indian Premier League 2026, 26th Match rcb vs Delhi Capitals opt to bowl
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆர்சிபி சூப்பர் தொடக்கம்... மும்பைக்கு 241 ரன்கள் இலக்கு!

இமாலய இலக்கை எட்டுமா சிஎஸ்கே? 251 ரன்கள் வெற்றி இலக்கு!
பந்துவீச்சில் நடராஜன், இங்கிடி அபாரம்! தில்லி கேபிடல்ஸுக்கு எளிய இலக்கு!

ஆர்சிபி என் டிஎன்ஏவின் ஒரு பகுதியாக எப்போதும் இருக்கும்: விஜய் மல்லையா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


