ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிகளுக்கான இடங்களை பிசிசிஐ மாற்றியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 20 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று நடைபெற்று வரும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றி ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி அகமதாபாதிலும், மே 21 ஆம் தேதி சென்னையிலும் விளையாடுவதாக இருந்தது. ஆனால், அகமதாபாதில் நகராட்சி தேர்தல் நடைபெறுவதால் ஏப்ரல் 26 ஆம் தேதி அகமதாபாதில் நடைபெறவிருந்த போட்டி சென்னை சேப்பாக்கம் திடலுக்கு மாற்றப்பட்டுள்ளது. மே 21 ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறவிருந்த போட்டி அகமதாபாதுக்கு மாற்றப்பட்டுள்ளது.
Summary
The BCCI has changed the venues for the matches between Chennai Super Kings and Gujarat Titans in the IPL tournament.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்குமா சிஎஸ்கே? ஹைதராபாதுக்கு 181 ரன்கள் இலக்கு!

சன்ரைசர்ஸுக்கு எதிராக சிஎஸ்கே பேட்டிங்; தோனி விளையாடவில்லை!

சாய் சுதர்சன் அரைசதம் விளாசல்; குஜராத் டைட்டன்ஸுக்கு 4-வது வெற்றி!







