ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் இன்றையப் போட்டியில் விளையாடவில்லை. ரோவ்மன் பௌவல் மற்றும் நவ்தீப் சைனி பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்புடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்குகிறது.
Summary
In the IPL match against Punjab Kings, Kolkata Knight Riders won the toss and elected to bat.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை பேட்டிங்; பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா இல்லை!

சிஎஸ்கே பேட்டிங்; 2-வது வெற்றி கிடைக்குமா?

சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிராக கொல்கத்தா பந்துவீச்சு! முதல் வெற்றி யாருக்கு?

ஐபிஎல் 2026: கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை பந்துவீச்சு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



